Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

திருத்தப்பட்ட GST படிவங்கள் - நவ.1 முதல் கருத்து தெரிவிக்கலாம்

திருத்தப்பட்ட GST படிவங்கள் - நவ.1 முதல் கருத்து தெரிவிக்கலாம்

நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வரிப் பொறுப்பு மற்றும் உள்ளீட்டு வரி பயன் தொடர்பான முரண்பாடுகளை குறைக்க புதிய நடைமுறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பகிரவும் WhatsApp Facebook

திருத்தப்பட்ட ஜிஎஸ்டி படிவங்கள் குறித்து நவ.1 முதல் பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் அறிவித்துள்ளது.

டெல்லியில் கடந்த அக்டோபர் 8-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 57-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், வரிப் பொறுப்பு மற்றும் உள்ளீட்டு வரி பயன் தொடர்பான முரண்பாடுகளை குறைக்க புதிய நடைமுறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால் வரி செலுத்துவோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுவது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுங்க வாரிய ஜிஎஸ்டி கொள்கை பிரிவு ஆணையர் கவுரங் சிங் கூறியதவாது: "திருத்தப்பட்ட படிவங்கள் நவம்பர் 1-ம் தேதி மைகவ் (MyGov) இணையதளத்தில் வெளியிடப்படும். நவம்பர் 30 வரை நிறுவனங்களும் வரி செலுத்துவோரும் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம். இந்த மாற்றங்கள் 2027 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும். ஜிஎஸ்டி ஆர்-1, ஜிஎஸ்டி. ஆர்-1ஏ மற்றும் விலைப்பட்டியல் விவரங்களைத் தாக்கல் செய்ய ஐஎப்எப் நடைமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

இந்தப் படிவங்களில் தெரிவிக்கப்படும் விவரங்களுக்கும், மாதாந்திர வரி செலுத்தப் பயன்படுத்தப்படும் ஜிஎஸ்டிஆர்-3பி படிவத்தில் குறிப்பிடப்படும் விவரங்களுக்கும் இடையே ஒத்திசைவை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும். மேலும், ரிவர்ஸ் சார்ஜ் முறையில் செலுத்தப்படும் வரி மற்றும் கோரப்படும் உள்ளீட்டு வரிச் சலுகை விவரங்களை மின்னணு முறையில் பதிவு செய்ய புதிய நடைமுறையையும் ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. உள்ளீட்டு வரிச் சலுகையைப் பதிவு செய்வது மற்றும் அதைத் திரும்பப் பெறுவது தொடர்பான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட உள்ளன.

ஜிஎஸ்டி தணிக்கை நடைமுறையை எளிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் செயல்படும் நிறுவனங்கள், தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாக ஜிஎஸ்டி தணிக்கையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. வரி செலுத்துவோருக்கு எவ்விதத் தேவையற்ற தொந்தரவும் ஏற்படாத வகையில் தணிக்கை நடைமுறை இருக்க வேண்டும் இவ்வாறு கவுரங் சிங் கூறியுள்ளார்.

முந்தைய செய்தி
இந்தியன் வங்கியின் சிறப்பு டெபாசிட்களுக்கு வட்டி உயர்வு
அடுத்த செய்தி
இந்தியன் வங்கியின் சிறப்பு டெபாசிட்களுக்கு வட்டி உயர்வு

தொடர்புடைய செய்திகள்